tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : அமைப்பையும் தத்துவத்தையும் இணைக்க அரும் பணியாற்றியவர்

தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்று கூறப்படும் வர்க்கக் கட்சிக்கு ஸ்தாபனம் என்றழைக்கப்படும் கட்சி அமைப்பு, மூளையும், முதுகெலும்புமாகும். முதலாளித்துவச் சுரண்டல் முறையினால் அவதிப்படும் தொழிலாளி வர்க்கம், தன் உரிமை காக்க, தன் நலன் காக்க பெற்றிருக்கும் ஒரே கருவி, கட்சி அமைப்பு என்பது தான். எனவே கட்சி அமைப்பை உருவாக்குவது, பாதுகாப்பது, பலப்படுத்துவது என்பது கம்யூனிஸ்ட்களின் தலையாய பணியாகும். தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் இப்பணியில் ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.

கட்சியின் உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய பரமேஸ்வரன் ஒன்றாகயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அளவுக்கு உயர்ந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக்குழு உறுப்பினராகவும் மாவட்டச் செயலாளராகவும் மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் ஆனார். 

1984 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக்கப்பட்ட அவர் 1988ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் தொடர்ந்து செயல்பட்டார். கட்சி அமைப்பையும், அரசியலையும், அடிப்படைத் தத்துவத்தையும் இணைத்து செயலாற்றியதுதான் அவர் புரிந்த சாதனைகளுக்கு ஆதாரமாக அமைந்தது. தமிழ் மொழியில், மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழை வெளிக் கொண்டு வருவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு மார்க்சிஸ்ட் தத்துவம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அவரது உயிரோட்டமான உறுதிப்பாட்டினை விவரிப்பதாக அமைந்திருந்தது.

===இன்று தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவுநாள்====

... பெரணமல்லூர் சேகரன்.....

;